Thursday, January 26, 2012

காதலும் அதன் இயற்கையும்..



பல்லாயிரக்கணக்கான,
பெண்களை கடக்கும் போதெல்லாம்,
மூளை யோசிக்கிறது
எனக்கானவள் யாரென்று..

உடல் மூளையின்,
கட்டுப்பாட்டுக்குள்,
இருப்பதுதான்.
இயற்கையின் படைப்பு..

இப்பொழுது மட்டும் என்ன?
என் மூளையே!
இதயத்தின் கட்டுப்பாட்டில்,
வந்து இருக்கிறது..

ஏதோ ஒரு முரண்பாடு..
மூளையின் கடைசி எச்சரிக்கையுடன்,
அதன் செயல்பாட்டை,
முடித்து கொண்டது..

இயற்கைக்கு புறம்பாக,
ஏதோ நிகழப் போகிறது
என்ற பயத்தில்,
சுற்றும் முற்றும்..
திரும்பிப்பார்த்தேன்,,

தூரத்தில் எவளோ?
ஒருவள் வருகிறாள்..
நிம்மதி அடைந்தேன்..



இயற்கைக்கு புறம்பானது இல்லை..
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...

வருவது பெண்தானே!!
பயமில்லை..

இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்..

இதயம் மட்டும் துடித்தது..
அவள்,
என் பின்னால் இருக்கும்,
உன் முதுகெலும்பால்
உருவானவள் என்று..

புரியவில்லை..
காதலும் அதன் இயற்கையும்..

emo love
Download As PDF

Sunday, January 15, 2012

அவளுக்கான அக்கவிதை யாருக்குமில்லை..












இதுவரை யாரென்று,
தெரியாத யாரையும்,
எப்போதும் யாரும்,
தேடுவதில்லை..

தனிமையில்
வயதொன்று,
சுயம்வரம் நடத்த,
கற்பனை,
துணையொன்று தேட,
விதிவிலக்காகிறது..
ஒரு உறவொன்று..

யாரென்று
தெரியாத ஒருவளை
தேடிப்போகிறேன் நான்..
காதலோ! திருமணமோ?


இன்னமும்,
அவள் வராத பாதையில்,
களைப்பாறிக்
காத்திருக்கிறேன்..

காத்திருக்கும் நேரத்தில்,
தனிமை சொன்ன உணர்வுகள்..
அவளுக்கான அக்கவிதைகள் ஆகின்றன..

கல்யாணத்திற்கு பிறகு,
அவள் தனிமை போக்கும்.
அக்கவிதைகள் என் நம்பிக்கைகள்..

இந்த உலகம் பெரியது..
அவள் யாரென்று தெரியாதபோது..
அவள் என் உலகமாவாது எப்போது..
அதுவரை,
அவள் வரும் வரை,

அவளுக்கான,
அக்கவிதையை
எழுதிக் கொண்டிருப்பேன்..

நான் எழுதும்,
அக்கவிதையை
யாருக்கும் காட்டப்போவதில்லை,,

அவளுக்கு மட்டும்..
என் உயிருக்கும் மட்டும்..
என் உலகிற்கு மட்டும்..

ஒருவேளை,
ஓராயிரம் வருடம் கழித்து,
மிகச் சிறந்த கவிதை ஒன்றை தேடி,
உலகெங்கும்,
ஒரு அகழ்வராய்ச்சி நடைபெறலாம்..

அக்கவிதையை
ஏதோ ஒரு அறையில்,
கண்டிபிடித்து விட்டதாய்,
ஒரு அகழ்வராய்ச்சியாளன் கத்துவான்..

அக்கவிதை நான் எழுதியதாய் இருக்கும்..
அது என் என்னவளைப் பற்றிய,
அக்கவிதையாய் இருக்கும்..

அப்போது,
நானும்,
அவளும்
இவ்வுலகில் வேறேங்கோ,
ஏழாம் முறை பிறந்திருப்போம்..
மறுபடியும் இணைந்திருப்போம்..

Download As PDF