Sunday, February 26, 2012

அவள் விசை...


புவி ஈர்ப்பு விசையில்
வாழ்பவன் நான்..

அவளின் முதல் பார்வையிலேயே,
எவ்வளவு வேகத்தில்,
காதலில் விழுந்தேன் என்று
எனக்கே தெரியவில்லை..
இதேன்ன அவள் விசை..

நியூட்டனே,
அவள்விசை தெரியுமா?

அவள் கண்ணின்
ஈர்ப்பு விசையாவது தெரியுமா?

அவள் கையசைவின்,
அதிர்வெண்...

அவள் பேச்சின்
அலைநீளம்...

செத்தே போனேன் நான்..
அவளைப் பார்க்கும் போதெல்லாம்,
என் காதலுக்குதான்,
சவால் என்றால்,
உன் அறிவியலுக்குமா???

புரியவில்லை..
நினைவுகளும்,
கனவுகளும்,
காதலுக்கு
ஏன் வினையில்லை என்று..

என் கற்பனைகளின்
எதிர்வினை யாவும்,
அவளுக்கான கவிதைகள் ஆகின..

நான் காதலால்,
கவிஞன் ஆன,
நாளன்று,
உனது மூன்றாம்
விதியை நம்பினேன்..
என் காதலுக்கு உதவுமேன..

ஒவ்வொரு வினைக்கும்
ஒரு எதிர் வினை உண்டேன
எழுதியது நீ தானே..

பூக்கள் இலகுவாக,
பெண்களை அடைவது,
ஒற்றை காலில் நிற்பதால் தானே..
நானும் ஒற்றைக்காலில்
தெருவோரத்தில் நின்றிருந்தேன்..
அவள் வரும் பாதையில்..























அவள் இயக்கத்தில்
இருக்கும் போது,
என் புற விசை
ஒரு அக விசையும்,
ஏற்படுத்தவில்லை அவளிடம்...

உன் விதி தோற்று போனது....
எல்லாம் என் விதியா?
உன் விதியா?

மாற்றி எழுது..
உன் மூன்றாம் விதியை..

ஒவ்வொரு வினைக்கும்,
ஒரு எதிர்வினை இருக்கிறது..
ஒரு தலை காதலுக்கு
அது பொருந்தாது என்று..
Download As PDF

Sunday, February 19, 2012

உன்னை தேடி...


உன்னை விட,
அழகான ஒன்று,
இவ்வுலகில் இருக்கக்கூடாதென,
பூக்களை பரிசளிக்கிறேன்..
உன்னை சந்திக்கும் போதெல்லாம்,
கடைசி பூக்கள் பூக்கும் வரை...

அதை நீ சூடி,
அவையெல்லாம் வாடி,
பார்க்கவே சந்தோக்ஷம்,
உன்னை சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம்,
ஏதோ, சாதித்து விட்டதாய் திரும்புவேன்..

பிரம்மனுக்கும் ஒரு எச்சரிக்கை!
இனி, அவன் உன்னை விட,
எதையும் அழகாக படைக்க மாட்டான்.
நான் அழித்து விடுவேன் என்று...

நம் ஜென்மம் முடியட்டும்
என காத்து இருப்பான்..

இன்றும் அப்படிதான்..
வார இறுதி நாட்கள்..
உன்னை தேடி,
பூக்களோடு புறப்படுகிறேன்..



இன்றாவது,
உன்னை முத்தமிட வேண்டும்...

ஒவ்வொரு முறையும்,
உன்னை முத்தமிட நெருங்கி,
முத்தமிடாமல் திரும்பி வருவது
எனக்கு வாடிக்கையாகி விட்டது,,

ஆனால், நீயோ!
அது, எதிர்பார்த்தது தான்
என்பது போல்,
அமைதியாய் இருப்பாய்..

உனக்கென்ன தெரியும்..
நான் படும் அவதி..
இன்று வரை தெரியவில்லை..

உன்னை மிக அருகே
பார்க்கும் போது,
ஏன் குழம்பி போகிறேன்..
எங்கு முத்தமிட வேண்டும் என்று..
அவ்வளவு அழகு நீ..



நிலவின் அழகிற்கு,
காரணம் நிலவல்ல..
இரவுகள்,,
அழகை அதிமாக்கும் இரவுகள்..

உலக விசித்திரம் தான்.

அதனால் தான்,
வெளிசமற்ற இரவில்
உன்னுடன் நடப்பதை தவிர்க்கிறேன்..
பயத்தினால் அல்ல..
நீயோ இரவில் ஜொலிப்பவள்...
அடிக்கடி, சிரித்து வேறு தொலைவாய்..
பின்பு தொலைவது நானும்,
என் தூய்மையான காதலும் தான்...



மனதில் தோன்றும் மறுமுகத்தால்,
எப்பொழும் தள்ளியே இருக்கிறேன்..
தூய்மையான காதலை பரிசளித்து,
உலகுக்கு பறைசாற்ற முயலுகிறேன்..

நான் உன் காதலன்,
மிக நல்லவன் என நீ நினைப்பாய்..
ஆனால், நான் மாறியது உன்னால் தான்..
உன்னை பார்த்த பிறகு தான்..

இன்றும் உன்னை பார்ப்பதற்கு,
கடற்கரையில் காத்திருக்கிறேன்..

பிறப்பின் அர்த்தம் புரிவது,
உன்னை பார்க்கும் போது தானே..



நீயும் தூரத்தில் வருவதைக்கண்டு,
பூக்களோடு நெருங்குகிறேன்..

யாரென்று தெரியாத உன்னை
காதலித்து கொண்டிருக்கும் போதே,
கனவுலகத்தின் ஆயுட்காலம்
முடிந்துவிட்டதனே,
விடிந்து விட்டதனே,
எழுப்புவார்கள்
என் அறை எமன்கள்..

காதலுக்கு கனவில்
இல்லை எதிரிகள்..

சற்றென்று எழுந்துவிடவே,
காதல் எதிரிகளை
கண்களால் எரித்து விட்டு,
கனவுலக்கு செல்ல முற்படுகிறேன்..
சொல்லாமல் வந்து விட்டனே!
என் கனவு காதலியே..

மறுபடியும் உன்னை
பூக்களோடு சந்திப்பேன்..
இவ்வுலகில் இறந்து,
கனவுலகில் பிறந்து...
Download As PDF

Sunday, February 5, 2012

அவளின் இறப்புக்கு பிறகு,



என் உயிரின்
உடல் இருக்கிறது..
உயிரில்லை..

எனக்கோ! உயிர் இருக்கிறது..
உணர்வில்லை..

ஆக்கமும், அழித்தலும் எவனோ..
காத்தலும், காதலும் நானே...

காத்தலில் குறையோ?
காதலில் குறையோ?
நீ இல்லை..
வழியில்லை..
விழி மூடி
பயணமில்லை..



ஏழேழு ஜென்மத்துக்கும்,
என் வாழ்வு அவளுடன்,
என்று ஏதோ ஒரு கவிதையில்,
எழுதி வைத்த நம்பிக்கயைில்,
இறந்த போனவளின்,
கல்லறையில் எழுதி வையுங்கள்..

இவள் எனக்காக
மறுபடியும் பிறப்பாள் என்று...

விழி மூடியவளுக்கான,
கடைசிகவிதையை
இப்பொழுதே
எழுதி வைக்கிறேன்..

என் கவிதைகளையும்,
இவளோடு புதைத்து விடுங்கள்..

எடுத்து படி என்னவளே!

நீ இறந்து மறுநொடி
இறந்திருப்பேன்..
உனக்கு முன்னே,
பிறந்திருப்பேன்..

Download As PDF