Wednesday, November 24, 2010

யார் அவன்???

எல்லாக் கதைக்கும்,
ஒரே முடிவை எழுதும்,
மிகச்சிறந்த எழுத்தாளன்,
ஒருவன் கதை எழுதுகிறான்..

தனக்கான கதையை,
தானே எழுதி,
நடித்துக் கொண்டிருக்கும்,
மனிதனை பற்றியது அது..

அவன் எழுதிய கதைகளில்,
படிக்கத் தூண்டும்,
தலைப்புகள் சில..

ஒரு பணக்காரனின் கதை..

பலம் மிகுந்த போர்வீரனின் கதை..

அகிம்சை வழியில் போராடுவனின் கதை..

ஒரு ஆராய்ச்சியாளனின் கதை..

பாவம்,
அது ஒரு ஏழையின் கதை..

சில சமயங்களில்,
அது ஒரு பக்கக் கதையாகவும் இருக்கிறது..
அது ஒரு குழந்தையின் கதை..

ம்..

கதை எவனுடையதாக வேண்டுமானாலும்,
இருந்து விட்டு போகட்டும்..
எவன் வேண்டுமானாலும்,
எப்படி வேண்டுமானாலும்,
நடித்து விட்டு போகட்டும்.

ஆனால்,
அந்த,
முட்டாள் எழுத்தாளின்,
முடிவு ஒன்று தான்,
இறப்பு...
Download As PDF

Saturday, November 20, 2010

மனிதநேயம் மலரச் செய்வோம்..



மனிதநேயத்தை,
மலரச் செய்ய வேண்டும்..

எவ்வாறு மலரச் செய்யலாம்???
பள்ளிக் கவிதை போட்டியில்,
எழுதியாக வேண்டும்..

ம்...

என்ன சொல்லி, என்ன பயன்??
மனிதன் படித்து விட்டு மறந்து விடுவான்..



ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..

மனித நேயத்தை நாம் மலர செய்ய வேண்டியதில்லை..
அதுவே பூத்து குலுங்கும்..
Download As PDF