Thursday, October 11, 2012

நீ தானே என் பொன் வசந்தம்...

இரவில்,
தூங்க போகும் முன்,
ஒரு குழந்தைப்போல்,
நீ கதை கேட்டால்,
உனக்கு சொல்லவே,
ஒரு கதை....ஒன்றாம் வகுப்பிலே ஆரம்பித்த,
என் காதல் கதை...
அவளுடன் தான்,
என் முதல் காதல்...

உனக்கு முன்னே,
என் வாழ்வில் வந்தவளை,
ஒரு நள்ளிரவில் சந்தித்தேன்..


பெண்ணொருத்தி,
தன் தோழிகளை சூழச்செய்து
கதைத்துக் கொண்டிருந்தாள்..
அவள் தான்,
என் தேவதையென,
காதலில் விழுந்தேன்..

பூமியோ சூரியனுக்காக காத்திருந்தது..
நானோ அவளுக்காக காத்திருந்தேன்..
அன்று முதல்,
இரவானால்..

நான்,
அவளுக்கான கவிதைகளை,
பூத்தாலும்,
உதிர்த்தாலும்..
அவள் சூடுவதுமில்லை!!
சுடுவதுமில்லை..இருந்தாலும்,
இயற்கைக்கு சொந்தமானவளை காதலித்தேன்..
காதலுக்குத்தான் கண்ணில்லையே!

இயற்கைக்கு புறம்பான என் காதல்..
தோல்வியில் முடிந்தது..
ஒரு தலைக்காதல் ஆயிற்றே!!

நீ அவளைப் பார்க்க ஆசைப்பட்டால்,
உன் கைபிடித்து,
அழைத்து போய்,
வானத்தில் தேடினேன்..நட்சத்திரங்களுக்கு நடுவில்,
வெள்ளை தேவதையாய்,
வீற்றிருந்து நிலாவைப் பார்த்து,
புரிந்து கொண்டவளாய்,
புன்னகைத்து கட்டி அணைத்தாய்..

புரிந்தது..
நீ நிலாவிலிருந்து வந்தவள் என்றும்..
நீ தானே என் பொன் வசந்தம் என்றும்..


Download As PDF

Monday, August 13, 2012

உனக்கான கவிதைகள் முடிவதில்லை..

என்னவளே!
நீ
பிறந்தவுடன்,
எழுதிய ஜாதகம் எங்கே??கட்டங்களுக்குள்
உன் வாழ்க்கையை
எழுதியவன் யார்?

அவனிடம் ஒன்று கேட்க வேண்டும்..
உன்னை,
பார்த்திலிருந்து,
நான் எழுத
தொடங்கிய
கவிதையையும்,
காதலையும்
எப்படி முடிப்பது என்று..ஒன்று மட்டும் புரிகிறது..
உனக்கான முடிவில்லா
கவிதையை எழுத
ஆரம்பித்து விட்டேன்..
என் காதலால்....


என்னவளே! இனி,
உன்னைப்பற்றி,
தெரிந்து கொள்ள,
ஜாதகம் தேவையில்லை..
எழுதியவனிடம் சொல்லிவிடு..
உன்னை பற்றி,
நான்கு கட்டங்களில்
எழுதி விட முடியாது என்று..

மேலும் சொல்லிவிடு,,
உன்னைப்பற்றி
தெரிந்து கொள்ள,
உன் மெளனத்தை,
மொழி பெயர்த்து,
நான் எழுதிய கவிதைகள்
போதுமென...


பூமி தன்னைத் தானே சுற்றுவதால்,
இரவும், பகலும் வருகிறது..
நான் உன்னை சுற்றுவதால்,
கவிதையின் முடிவில் கவிதையே வருகிறது..
இது கவிதையின் விதியோ?
காதலின் விதியோ?

உனக்கான கவிதைகள் முடிவதில்லை..
என் உயிருள்ள வரை..

நீ தூக்கத்திலிருந்து
துயிலுருவதை கவிதையாக்க
காத்திருக்கிறேன்..
விடியலை நோக்கி...
Download As PDF

Thursday, July 12, 2012

என் நிலாவின் தேவதையே..

உன்னைப் பார்த்தவுடன்,
கேட்பதற்கென்றே,
கேள்வி ஒன்றை வைத்திருக்கிறேன் நான்..


எப்போது நிலவில் இருந்து,
பூமிக்குள் வந்தாய் என்று??

எனக்கு வாய்த்தவள்..நீ..
அறிவாளியாகத் தான் பேசுவாய்..

23 வருடங்கள் என்பாய்..
நீ பிறந்து,
உன் வயது..

ஆனால்,
அதைப்புரிந்து கொள்ள,
உன்னளவு தெளிவில்லை நான்..

நீயும் புரியாதவளாய்?
உன் கண்ணில்,
கேள்விகுறியாய் நான்...
உன் கண்கள் கூட பேசுமோ?
பயத்தில உளறினேன்.."தேவதைகள் எல்லாம்,
நிலாவில் தான் வாழ்வார்களாம்",,
யாரே சொல்லி கேட்டிருக்கிறேன்..
நீ எப்பொழுது நிலாவிலிருந்து,
பூமிக்கு வந்தாய்??

கேட்டுக்கொண்டே,
உன் முகத்தின் பாவனைகளை
மொழிப் பெயர்க்க முடியாமல் தடுமாறினேன்..

ஆனால்,
நீயே என்னை கொல்ல,
உன் சிரிப்போடு,
வெட்கத்தையும் சேர்த்து
பதிலாய் தந்தாய்..

இது தான் உன் பதில் என்றால்,
சிரிப்பு கலந்த வெட்கத்தை பெற,
இன்னமொரு கேள்விக்கு
நான் எங்கு போவேன்..
இப்படியே தேடலுடன் தொடங்குகிறது..
என் வாழ்க்கை உன்னுடன்..

என் நிலாவின் தேவதையே..
Download As PDF

Sunday, April 1, 2012

என்னை தத்தி என்பாய்...


என்னை விட்டு,
எப்பவும் என் தோழிகள்..
தள்ளியே நடக்கிறார்கள்..
பிடிக்கவில்லை என்பாய்..
காரணம் என்னவென்று,
என்னிடம் கேட்பாய்..

நிலாவை விட்டு,
தள்ளியே இருக்கும்
நட்சத்திரங்களுக்கு மட்டும்
தெரிந்த ரகசியத்தை,
நான் எப்படி அறிவேன் என்பேன்..

என்னை தத்தி என்பாய்...

ஆம்,
உன் வீட்டு கதவை,
முதல் முதலாய்,
தட்டிய போது,
கதவை திறந்த நீ,
முகத்தை மட்டும்,
காட்டிய போது தான்
எனக்கே புரிந்தது..
வானில் தெரியும்
நிலவின் ரகசியம்..

கடவுளின் படைப்பை
புரிந்தவன் எவன்..
முயற்சிக்காமல்,
காதலின் விழுதல் நலன்
என்று நம்பிவன் நான்..சில சமயங்களில்,
வாய் தவறி,
நிலா என்று அழைப்பதுண்டு..

நிலாவா?
அது இரவில் மட்டும்
என்று அறிவாளிதானமாக
பேசுவாய்..

அப்படி நீ பேசும் போதெல்லாம்,
உன்னால் ஒளி பெறும்
சூரியன் ஆனேன் நான்..

எப்பொழுதும் என்னிடம்
நீ கேட்கும் கேள்வி..
என்னை ஏன்
காதலித்தாய் என்று..
Surya and Jyothika @ Karthi Wedding Photos
உன்னை நான் எதற்கு காதலித்தேன்..
என்று தெரியவில்லை...
தெரிந்து கொள்ள தானே...
தினமும் காதலிக்கிறேன் என்பேன்...

உனக்கு அமைதி கோபம் வரும்..
சமதானப்படுத்து வழி தெரியாமல்,
உடனடியாக தெரிய வேணுமா?
இப்போது நீ போய்,
உன் வீட்டு கண்ணாடியிடம் கேள் என்பேன்..


போடா தத்தி என்பாய்..

மனதில் சொல்லிக் கொண்டேன்...
நான் தத்தி தான்..
என் தத்தையே...

எனக்கொரு ஆயுள் தேவை..
உன்னை ஏன் காதலித்தேன்...
தெரிந்து கொள்ள,
பிறகு சொல்ல..
Download As PDF

Monday, March 12, 2012

என் கேள்விக்குறி கவிதைகளே..


என் தனிமைக்கும்,
கற்பனைக்கும்,
காதல் வரும் போதெல்லாம்,
அவளுக்கான கவிதை விரிகிறது...

அவளுக்கான தேடலில்,
உயிர் பெறும் வார்த்தைகள்
மட்டும் கவிதையாகின்றன..

ஒவ்வொரு முறையும்,
அவளுக்கான கவிதையை
எழுதி முடித்த திருப்தியில்..
அக்கவிதைகளின்
முற்று புள்ளிகளில்,
இறந்து போகிறேன் நான்...மீண்டுமொரு,
கவிதையில்
பிறக்கிறேன்..

கற்பனையையும், தனிமையையும்
பிரிக்க முடியாமல்
கவிதையின் முடிவுக்காக காத்திருந்தேன்..

நானோ பூமியில் பிறந்தவன்..
ஒருவேளை அவள் நிலவில் பிறந்திருப்பாளோ???

சரி??????????
கேள்விதனைக் கொண்ட,
என் கவிதைகள் யாவும்
கேள்விக்குறி ஆகும்..அவள்
வந்து படிக்கும் போது,
கவிதைகள் யாவும் உயிர் பெறும்.
என் காதலும்..

Download As PDF

Sunday, March 4, 2012

நீ...

நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..

நீ...

Download As PDF

Sunday, February 26, 2012

அவள் விசை...


புவி ஈர்ப்பு விசையில்
வாழ்பவன் நான்..

அவளின் முதல் பார்வையிலேயே,
எவ்வளவு வேகத்தில்,
காதலில் விழுந்தேன் என்று
எனக்கே தெரியவில்லை..
இதேன்ன அவள் விசை..

நியூட்டனே,
அவள்விசை தெரியுமா?

அவள் கண்ணின்
ஈர்ப்பு விசையாவது தெரியுமா?

அவள் கையசைவின்,
அதிர்வெண்...

அவள் பேச்சின்
அலைநீளம்...

செத்தே போனேன் நான்..
அவளைப் பார்க்கும் போதெல்லாம்,
என் காதலுக்குதான்,
சவால் என்றால்,
உன் அறிவியலுக்குமா???

புரியவில்லை..
நினைவுகளும்,
கனவுகளும்,
காதலுக்கு
ஏன் வினையில்லை என்று..

என் கற்பனைகளின்
எதிர்வினை யாவும்,
அவளுக்கான கவிதைகள் ஆகின..

நான் காதலால்,
கவிஞன் ஆன,
நாளன்று,
உனது மூன்றாம்
விதியை நம்பினேன்..
என் காதலுக்கு உதவுமேன..

ஒவ்வொரு வினைக்கும்
ஒரு எதிர் வினை உண்டேன
எழுதியது நீ தானே..

பூக்கள் இலகுவாக,
பெண்களை அடைவது,
ஒற்றை காலில் நிற்பதால் தானே..
நானும் ஒற்றைக்காலில்
தெருவோரத்தில் நின்றிருந்தேன்..
அவள் வரும் பாதையில்..அவள் இயக்கத்தில்
இருக்கும் போது,
என் புற விசை
ஒரு அக விசையும்,
ஏற்படுத்தவில்லை அவளிடம்...

உன் விதி தோற்று போனது....
எல்லாம் என் விதியா?
உன் விதியா?

மாற்றி எழுது..
உன் மூன்றாம் விதியை..

ஒவ்வொரு வினைக்கும்,
ஒரு எதிர்வினை இருக்கிறது..
ஒரு தலை காதலுக்கு
அது பொருந்தாது என்று..
Download As PDF

Sunday, February 19, 2012

உன்னை தேடி...


உன்னை விட,
அழகான ஒன்று,
இவ்வுலகில் இருக்கக்கூடாதென,
பூக்களை பரிசளிக்கிறேன்..
உன்னை சந்திக்கும் போதெல்லாம்,
கடைசி பூக்கள் பூக்கும் வரை...

அதை நீ சூடி,
அவையெல்லாம் வாடி,
பார்க்கவே சந்தோக்ஷம்,
உன்னை சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம்,
ஏதோ, சாதித்து விட்டதாய் திரும்புவேன்..

பிரம்மனுக்கும் ஒரு எச்சரிக்கை!
இனி, அவன் உன்னை விட,
எதையும் அழகாக படைக்க மாட்டான்.
நான் அழித்து விடுவேன் என்று...

நம் ஜென்மம் முடியட்டும்
என காத்து இருப்பான்..

இன்றும் அப்படிதான்..
வார இறுதி நாட்கள்..
உன்னை தேடி,
பூக்களோடு புறப்படுகிறேன்..இன்றாவது,
உன்னை முத்தமிட வேண்டும்...

ஒவ்வொரு முறையும்,
உன்னை முத்தமிட நெருங்கி,
முத்தமிடாமல் திரும்பி வருவது
எனக்கு வாடிக்கையாகி விட்டது,,

ஆனால், நீயோ!
அது, எதிர்பார்த்தது தான்
என்பது போல்,
அமைதியாய் இருப்பாய்..

உனக்கென்ன தெரியும்..
நான் படும் அவதி..
இன்று வரை தெரியவில்லை..

உன்னை மிக அருகே
பார்க்கும் போது,
ஏன் குழம்பி போகிறேன்..
எங்கு முத்தமிட வேண்டும் என்று..
அவ்வளவு அழகு நீ..நிலவின் அழகிற்கு,
காரணம் நிலவல்ல..
இரவுகள்,,
அழகை அதிமாக்கும் இரவுகள்..

உலக விசித்திரம் தான்.

அதனால் தான்,
வெளிசமற்ற இரவில்
உன்னுடன் நடப்பதை தவிர்க்கிறேன்..
பயத்தினால் அல்ல..
நீயோ இரவில் ஜொலிப்பவள்...
அடிக்கடி, சிரித்து வேறு தொலைவாய்..
பின்பு தொலைவது நானும்,
என் தூய்மையான காதலும் தான்...மனதில் தோன்றும் மறுமுகத்தால்,
எப்பொழும் தள்ளியே இருக்கிறேன்..
தூய்மையான காதலை பரிசளித்து,
உலகுக்கு பறைசாற்ற முயலுகிறேன்..

நான் உன் காதலன்,
மிக நல்லவன் என நீ நினைப்பாய்..
ஆனால், நான் மாறியது உன்னால் தான்..
உன்னை பார்த்த பிறகு தான்..

இன்றும் உன்னை பார்ப்பதற்கு,
கடற்கரையில் காத்திருக்கிறேன்..

பிறப்பின் அர்த்தம் புரிவது,
உன்னை பார்க்கும் போது தானே..நீயும் தூரத்தில் வருவதைக்கண்டு,
பூக்களோடு நெருங்குகிறேன்..

யாரென்று தெரியாத உன்னை
காதலித்து கொண்டிருக்கும் போதே,
கனவுலகத்தின் ஆயுட்காலம்
முடிந்துவிட்டதனே,
விடிந்து விட்டதனே,
எழுப்புவார்கள்
என் அறை எமன்கள்..

காதலுக்கு கனவில்
இல்லை எதிரிகள்..

சற்றென்று எழுந்துவிடவே,
காதல் எதிரிகளை
கண்களால் எரித்து விட்டு,
கனவுலக்கு செல்ல முற்படுகிறேன்..
சொல்லாமல் வந்து விட்டனே!
என் கனவு காதலியே..

மறுபடியும் உன்னை
பூக்களோடு சந்திப்பேன்..
இவ்வுலகில் இறந்து,
கனவுலகில் பிறந்து...
Download As PDF

Sunday, February 5, 2012

அவளின் இறப்புக்கு பிறகு,என் உயிரின்
உடல் இருக்கிறது..
உயிரில்லை..

எனக்கோ! உயிர் இருக்கிறது..
உணர்வில்லை..

ஆக்கமும், அழித்தலும் எவனோ..
காத்தலும், காதலும் நானே...

காத்தலில் குறையோ?
காதலில் குறையோ?
நீ இல்லை..
வழியில்லை..
விழி மூடி
பயணமில்லை..ஏழேழு ஜென்மத்துக்கும்,
என் வாழ்வு அவளுடன்,
என்று ஏதோ ஒரு கவிதையில்,
எழுதி வைத்த நம்பிக்கயைில்,
இறந்த போனவளின்,
கல்லறையில் எழுதி வையுங்கள்..

இவள் எனக்காக
மறுபடியும் பிறப்பாள் என்று...

விழி மூடியவளுக்கான,
கடைசிகவிதையை
இப்பொழுதே
எழுதி வைக்கிறேன்..

என் கவிதைகளையும்,
இவளோடு புதைத்து விடுங்கள்..

எடுத்து படி என்னவளே!

நீ இறந்து மறுநொடி
இறந்திருப்பேன்..
உனக்கு முன்னே,
பிறந்திருப்பேன்..

Download As PDF

Thursday, January 26, 2012

காதலும் அதன் இயற்கையும்..பல்லாயிரக்கணக்கான,
பெண்களை கடக்கும் போதெல்லாம்,
மூளை யோசிக்கிறது
எனக்கானவள் யாரென்று..

உடல் மூளையின்,
கட்டுப்பாட்டுக்குள்,
இருப்பதுதான்.
இயற்கையின் படைப்பு..

இப்பொழுது மட்டும் என்ன?
என் மூளையே!
இதயத்தின் கட்டுப்பாட்டில்,
வந்து இருக்கிறது..

ஏதோ ஒரு முரண்பாடு..
மூளையின் கடைசி எச்சரிக்கையுடன்,
அதன் செயல்பாட்டை,
முடித்து கொண்டது..

இயற்கைக்கு புறம்பாக,
ஏதோ நிகழப் போகிறது
என்ற பயத்தில்,
சுற்றும் முற்றும்..
திரும்பிப்பார்த்தேன்,,

தூரத்தில் எவளோ?
ஒருவள் வருகிறாள்..
நிம்மதி அடைந்தேன்..இயற்கைக்கு புறம்பானது இல்லை..
ஆணின் முதுகெலும்பிலிருந்து,
முதல் பெண்ணின் படைப்பு...

வருவது பெண்தானே!!
பயமில்லை..

இதயத்தின் துடிப்பில் ஒரு மாற்றம்.
அவளை மிக அருகில் பார்த்தேன்..
உடலும், உயிரும் அடங்கின..
மூளையும் தான்..

இதயம் மட்டும் துடித்தது..
அவள்,
என் பின்னால் இருக்கும்,
உன் முதுகெலும்பால்
உருவானவள் என்று..

புரியவில்லை..
காதலும் அதன் இயற்கையும்..

emo love
Download As PDF

Sunday, January 15, 2012

அவளுக்கான அக்கவிதை யாருக்குமில்லை..
இதுவரை யாரென்று,
தெரியாத யாரையும்,
எப்போதும் யாரும்,
தேடுவதில்லை..

தனிமையில்
வயதொன்று,
சுயம்வரம் நடத்த,
கற்பனை,
துணையொன்று தேட,
விதிவிலக்காகிறது..
ஒரு உறவொன்று..

யாரென்று
தெரியாத ஒருவளை
தேடிப்போகிறேன் நான்..
காதலோ! திருமணமோ?


இன்னமும்,
அவள் வராத பாதையில்,
களைப்பாறிக்
காத்திருக்கிறேன்..

காத்திருக்கும் நேரத்தில்,
தனிமை சொன்ன உணர்வுகள்..
அவளுக்கான அக்கவிதைகள் ஆகின்றன..

கல்யாணத்திற்கு பிறகு,
அவள் தனிமை போக்கும்.
அக்கவிதைகள் என் நம்பிக்கைகள்..

இந்த உலகம் பெரியது..
அவள் யாரென்று தெரியாதபோது..
அவள் என் உலகமாவாது எப்போது..
அதுவரை,
அவள் வரும் வரை,

அவளுக்கான,
அக்கவிதையை
எழுதிக் கொண்டிருப்பேன்..

நான் எழுதும்,
அக்கவிதையை
யாருக்கும் காட்டப்போவதில்லை,,

அவளுக்கு மட்டும்..
என் உயிருக்கும் மட்டும்..
என் உலகிற்கு மட்டும்..

ஒருவேளை,
ஓராயிரம் வருடம் கழித்து,
மிகச் சிறந்த கவிதை ஒன்றை தேடி,
உலகெங்கும்,
ஒரு அகழ்வராய்ச்சி நடைபெறலாம்..

அக்கவிதையை
ஏதோ ஒரு அறையில்,
கண்டிபிடித்து விட்டதாய்,
ஒரு அகழ்வராய்ச்சியாளன் கத்துவான்..

அக்கவிதை நான் எழுதியதாய் இருக்கும்..
அது என் என்னவளைப் பற்றிய,
அக்கவிதையாய் இருக்கும்..

அப்போது,
நானும்,
அவளும்
இவ்வுலகில் வேறேங்கோ,
ஏழாம் முறை பிறந்திருப்போம்..
மறுபடியும் இணைந்திருப்போம்..

Download As PDF