Saturday, December 18, 2010

இதயம்..

நான்கு அறைகளாக,
பிரிந்து கிடந்தாலும்,
ஒன்றாக சேர்ந்து துடிக்கிறது - உனக்காக..

முதல் துடிப்பு முளைக்கிறது
உன் பார்வையில்,

ஒவ்வொரு துடிப்பிலும்,
உன் வரவு இங்கு வாழ்க்கையாகிறது
உன் பாதச்சுவடுகளில்,

இறுதி துடிப்பு மட்டும் இறப்பாகிறது..
நீ இல்லையென்றால்..

இதயம் என்றாலே துடிப்பது தானே..
அதற்கு வேலையில்லை..
சில சமயம் வலிகளில் துடிக்கிறது..
உன்னை காணாமல்,

சில சமயம் சந்தோஷத்தில் துடிக்கிறது
உன் வருகையால்..

ஆனால்
அதன் துடிப்பின்
சத்தம் மட்டும்,
உணர்தலில்
கேட்கப் படுகிறது...

மனித ஒற்றுமை
மனித உருவத்தில்
மாறினாலும்,
இதய உருவத்தில்
இணைகிறது - காதல்..
Download As PDF

Wednesday, November 24, 2010

யார் அவன்???

எல்லாக் கதைக்கும்,
ஒரே முடிவை எழுதும்,
மிகச்சிறந்த எழுத்தாளன்,
ஒருவன் கதை எழுதுகிறான்..

தனக்கான கதையை,
தானே எழுதி,
நடித்துக் கொண்டிருக்கும்,
மனிதனை பற்றியது அது..

அவன் எழுதிய கதைகளில்,
படிக்கத் தூண்டும்,
தலைப்புகள் சில..

ஒரு பணக்காரனின் கதை..

பலம் மிகுந்த போர்வீரனின் கதை..

அகிம்சை வழியில் போராடுவனின் கதை..

ஒரு ஆராய்ச்சியாளனின் கதை..

பாவம்,
அது ஒரு ஏழையின் கதை..

சில சமயங்களில்,
அது ஒரு பக்கக் கதையாகவும் இருக்கிறது..
அது ஒரு குழந்தையின் கதை..

ம்..

கதை எவனுடையதாக வேண்டுமானாலும்,
இருந்து விட்டு போகட்டும்..
எவன் வேண்டுமானாலும்,
எப்படி வேண்டுமானாலும்,
நடித்து விட்டு போகட்டும்.

ஆனால்,
அந்த,
முட்டாள் எழுத்தாளின்,
முடிவு ஒன்று தான்,
இறப்பு...
Download As PDF

Saturday, November 20, 2010

மனிதநேயம் மலரச் செய்வோம்..



மனிதநேயத்தை,
மலரச் செய்ய வேண்டும்..

எவ்வாறு மலரச் செய்யலாம்???
பள்ளிக் கவிதை போட்டியில்,
எழுதியாக வேண்டும்..

ம்...

என்ன சொல்லி, என்ன பயன்??
மனிதன் படித்து விட்டு மறந்து விடுவான்..



ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..

மனித நேயத்தை நாம் மலர செய்ய வேண்டியதில்லை..
அதுவே பூத்து குலுங்கும்..
Download As PDF

Sunday, October 31, 2010

கவிதை இல்லை...



அவளைப்பற்றி,
ஏதாவது,
கவிதை எழுத வேண்டும்..
சிந்தனையில்,
சிதைந்து போகின்றன..
என் நகங்கள்..
Download As PDF

கவிதை எழுத பயம்...


ஒற்றைப் பார்வையில்,
ஒராயிரம் கவிதைகள் எழுதிவிடும்,
உன் கண்களைப் பார்க்கும் போது,
மட்டும் தான்,
கவிதை எழுத நடுங்குகிறது...
என் கைவிரல்கள்..
Download As PDF

Saturday, October 30, 2010

காதல் கடிதம்...



இன்று காதல் கடிதம் எழுதுவது
என முடிவெடுத்தேன்..

மலரும் நினைவுகள்...

முதல் நாள்..
முதல் பள்ளிக்கூடம்..
முதலாம் வகுப்பு..

எழுத்துக்களைக் கற்று முடித்தவுடன்,
அவள் பெயரைக் கேட்டு,
எழுதி காட்டினேன் - சிரித்தாள்..

எண்களைக் கற்று முடித்தவுடன்,
அவள் வீட்டு தொலைப்பேசி எண்ணை கண்டுபிடித்து,
அவளிடம் சொன்னேன் - ஆச்சர்யப்பட்டாள்..

எல்லாம் கற்று முதலாம் வகுப்பு
தேர்ச்சிப் பெற்றேன் - அவளும் தான்..

முழு விடுமுறை முழுவதும் உட்கார்ந்து,
அவளுக்காக காதல் கடிதம் எழுதிதேன்.
அனுப்புனர், பெறுனர் இட்டு,
அப்பாவின் கையெழுத்தையும் போட்டு..

முதல் நாள்,
அதே பள்ளிக்கூடம்,
இரண்டாம் வகுப்பு..

முதலாம் ஆண்டு படித்ததன்,
அத்தனை திறனையும் பயன்படுத்தி.
எழுதிய கடிதத்தை அவளிடம் கொடுத்தேன்..

அதில் நிறைய பிழைகள் இருப்பதாகவும்,
அப்பாவின் கையெழுத்தை நானே
போட்டதையும் கண்டுபிடித்து.
காதலை நிரகாரித்தாள்..

எல்லாம் நினைவில் வைத்து,
இன்று,
காதல் கடிதம் எழுதி முடித்தேன்..
தவறில்லாமல்..

அவளுக்கு அல்ல..
அவளை போல் ஒருவளுக்கு.....
Download As PDF

நிலாவுடன் முதல் காதல்...



என் அம்மா நிலாவைக் காட்டி,
ஊட்டிய முதல் உணவில்,
நிலாவின் அழகில்
என் இதயம் கருவித்தது..

நான் ஒடும் இடமெல்லாம்
என் கூடவே வரும் நிலவை பிடித்திருந்து..

இதயக்கருவில் நிலாவின்
மீதான காதல் வளர்ந்தது..
நானும் கூட..


வளர்பிறையாய் நிலாவைப் பார்க்கும் போது,
என் காதலை சொல்ல தோன்ற வில்லை..
நிலாவை கொஞ்சம் எட்டி இருந்து ரசித்தேன்..
காத்திருந்தேன் முழு நிலாவுக்காக..

முழு நிலாவின் அழகை பார்த்து,
காதலை சொல்லும் தைரியம் இல்லை..
திரும்பி வந்தேன்..

தேய்பிறையாய் நிலாவைப் பார்க்கும் போது,
எங்கோ மறைந்து போய் விடுமோ?
பயம் வந்தது இதயத்துக்குள்..
கருகலைப்புக்கு என் இதயம் தையராக இல்லை..

கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை
வர வழைத்து, காதலைச் சொல்ல
நிலாவை தேடுகின்றேன்,
இன்று அம்மாவாசை என்று தெரியாமல்..

வான்வெளி முழுவதும் நடந்து,
எல்லா நட்சத்திரசத்திடமும்,
கேட்டு பார்த்து விட்டேன்..

எந்த நட்சத்திரத்துக்கும்
நிலவு போனப் பாதை தெரியவில்லை..

என் தாய் தான் நிலாவைக்காட்டியவள்..
அவளைக் கேட்பது என்று முடிவு செய்தேன்..

ஆனால், அவளோ இன்று அம்மாவாசை
நிலவோ பூமியின் பின்னால் ஒளிந்திருக்கும் என்றாள்..

நிலவு பூமியை சுற்றி வரும் என்றாள்..

என் தலையில் தட்டி,
என் ஐந்தாம் வகுப்பு
சமூகவியல் புத்தகத்தை கையில் கொடுத்தாள்..

எனக்கு ஒன்றும் புரிய வில்லை..

முதல் முறையாக படித்துப் பார்த்தான்..
நிலாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம்..
என் கருவறை இதயம் கல்லறையானது..

என் காதல் மீதிருந்த நம்பிக்கையில்,
நிலவு பூமியை சுற்றாது
என்று நேற்று
சமுகவியல் தேர்வில் சரி என்று
எழுதியது தவறு என்று உணர்ந்தேன்..

இந்த பூமியில் பிறப்பதற்கும்,
நிலவு சுற்றும் பூமியாய் பிறப்பதற்க்கும்,
உள்ள வித்தியாங்கள் புரியவில்லை..

அடுத்த ஜென்மத்திலத்திவாது
பூமியாய் பிறக்க வேண்டுமென
சொல்லிக் கொண்ட தூங்கி போனான்..

Download As PDF

என் வாக்குமூலம்..



பூ ஒன்றை கொய்ததால்,
அவனை கொலை செய்தேன்..

என்னவளின் கூந்தலலிருந்து...
Download As PDF

ஒரு தலைக்காதல்....




பூமியின் மீது கொண்ட காதலால்,
தாய் மரத்தின் உறவை துண்டித்து,
காற்றில் அழகாய் பறந்து,
பூமியைத் தொட்டு,
சருகைப்போனது....
ஒரு இலையின் காதல்....


Download As PDF

அவன் க(வி)தையில் கடவுளும் கதறினார்.....


உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு  நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது


அழகாய் பிறந்தான் ஒருவன் அவன்..
இறைவன் சிரித்தார்..
அவன் பிறப்பின் முதல் கதறலைக் கண்டு,

குப்புறப் படுத்தான்,,,
தவழ்ந்தான்,,,,
நடந்தான்....

முன்னொருக் காலத்தில் வாழ்ந்த எவனோ,
பணம் என்ற ஒன்றை கண்டுப் பிடித்திருக்கிறான்...
என்பதை அறிகிறான் அவன்...

கல்விக்காக அவன் சில காலம் ஒடுகிறான்...

பணத்திற்காக அவன் பல காலம் ஒடுகிறான் வாழ்நாளில்...

கல்வி அவன் பதவிக்காகவும்,
பதவி அவன் பணத்திற்காகவும்,
பணம் அவன் தேவைகளுக்காகவும்...

அவனுடைய சிறு வயது பொம்மைகளை,
அவன் வீட்டு அலமாரியில் தொலைத்த போதும்,
அவனுக்குப் புரியவில்லை...

துவிச் சக்கர வண்டியின் வருகையால்,
மிதிவண்டியை,
அவன் வீட்டுத் தோட்டத்தில் தொலைத்த போதும்,
அவனுக்குப் புரியவில்லை...

ஆசை ஆசையாய்,
வருடக் கணக்காய் காதலித்தவளை,
அவன் வீட்டு சமயலறையில்,
தொலைக்கும் போது மட்டும்,
அவனுக்கு கொஞ்சம் புரிந்திருந்தது...

இருந்தாலும் தேவைகள் துரத்தியது..
தேடிக் கொண்டு ஒடினான்..

தேடி முடித்தவுடன் தொலைப்பது தான்,
அவன் வாழ்க்கை எனத் தெரிந்தும்,
அவன் தேடல்களும்,
தேவைகளின் ஓட்டங்களும் என்றுமே நின்றதில்லை...

கூனாகினான்..
தள்ளாடினான்..
படுத்தான்....

எங்கோ ஒரு குரல் கேட்கிறது...
அவன் சற்றே நிமிர்ந்து பார்க்கிறான்...
அங்கு, அவனுக்கு எமனால் இறப்பு அறிவிக்கப்படுகிறது....

இறப்பை நோக்கி ஒடி வரும்,
எனக்குத் தான் இத்தனை தேவைகளா?

அலறுகிறான் அவன் - இறப்பிற்காக அல்ல...
அவனெடுத்தப் பிறவியில்,
அவனுக்கு கடைசிவரை,
வாழ்வதற்கான நேரத்தையே,
இறைவன் கொடுக்க இல்லையாம்...
இறைவனிடம் முறையிட்டான்...
அவன் யாரோ ஒரு மனிதனாம்...

அவனின் கடைசிக் கதறலைக் கண்டு,
இறைவனும் கதறினார்...

உன் பிறப்பு என் கையில்...
உன் இறப்பு எமன் கையில்...
உன் வாழ்வு உன் கையிலடா...!!!

Download As PDF

Tuesday, October 19, 2010