Saturday, October 30, 2010

நிலாவுடன் முதல் காதல்...



என் அம்மா நிலாவைக் காட்டி,
ஊட்டிய முதல் உணவில்,
நிலாவின் அழகில்
என் இதயம் கருவித்தது..

நான் ஒடும் இடமெல்லாம்
என் கூடவே வரும் நிலவை பிடித்திருந்து..

இதயக்கருவில் நிலாவின்
மீதான காதல் வளர்ந்தது..
நானும் கூட..


வளர்பிறையாய் நிலாவைப் பார்க்கும் போது,
என் காதலை சொல்ல தோன்ற வில்லை..
நிலாவை கொஞ்சம் எட்டி இருந்து ரசித்தேன்..
காத்திருந்தேன் முழு நிலாவுக்காக..

முழு நிலாவின் அழகை பார்த்து,
காதலை சொல்லும் தைரியம் இல்லை..
திரும்பி வந்தேன்..

தேய்பிறையாய் நிலாவைப் பார்க்கும் போது,
எங்கோ மறைந்து போய் விடுமோ?
பயம் வந்தது இதயத்துக்குள்..
கருகலைப்புக்கு என் இதயம் தையராக இல்லை..

கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை
வர வழைத்து, காதலைச் சொல்ல
நிலாவை தேடுகின்றேன்,
இன்று அம்மாவாசை என்று தெரியாமல்..

வான்வெளி முழுவதும் நடந்து,
எல்லா நட்சத்திரசத்திடமும்,
கேட்டு பார்த்து விட்டேன்..

எந்த நட்சத்திரத்துக்கும்
நிலவு போனப் பாதை தெரியவில்லை..

என் தாய் தான் நிலாவைக்காட்டியவள்..
அவளைக் கேட்பது என்று முடிவு செய்தேன்..

ஆனால், அவளோ இன்று அம்மாவாசை
நிலவோ பூமியின் பின்னால் ஒளிந்திருக்கும் என்றாள்..

நிலவு பூமியை சுற்றி வரும் என்றாள்..

என் தலையில் தட்டி,
என் ஐந்தாம் வகுப்பு
சமூகவியல் புத்தகத்தை கையில் கொடுத்தாள்..

எனக்கு ஒன்றும் புரிய வில்லை..

முதல் முறையாக படித்துப் பார்த்தான்..
நிலாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம்..
என் கருவறை இதயம் கல்லறையானது..

என் காதல் மீதிருந்த நம்பிக்கையில்,
நிலவு பூமியை சுற்றாது
என்று நேற்று
சமுகவியல் தேர்வில் சரி என்று
எழுதியது தவறு என்று உணர்ந்தேன்..

இந்த பூமியில் பிறப்பதற்கும்,
நிலவு சுற்றும் பூமியாய் பிறப்பதற்க்கும்,
உள்ள வித்தியாங்கள் புரியவில்லை..

அடுத்த ஜென்மத்திலத்திவாது
பூமியாய் பிறக்க வேண்டுமென
சொல்லிக் கொண்ட தூங்கி போனான்..

Download As PDF

No comments:

Post a Comment