Sunday, November 20, 2011

ஒரு கண்ணாடி அறைக்குள்..

அமர்ந்த இடத்திலேயே,
வாழும் நாடோடி வாழ்க்கையை,
கற்று தேர்ந்தான் ஒருவன்.

எதையும் தொலைக்காமல்,
தேடிச் செல்லும்
அவன் வாழ்க்தை தான்,
வலைதளங்களில்..

தனிமை என்பது எனக்கு இல்லை
என்று சொல்லி,
முகப்புத்தகத்தில்,
முகத்தெரியாதவர்களின் வருகைக்காக,
காத்திருக்கும் அவன்.

முகம் பார்த்து பேசும்
உணர்ச்சிகளை பற்றி தெரிந்திருந்தும்,
அவன் உறவுகள்,
எப்போதும் அலைபேசியில்..

டாலர்களின் உறவுக்காக,
தூர தேசம் போன அவன்..
அவ்வவ்போது காணொளிப்பேசியில்.
அவன் உயிர்களுடன்,
மனைவியும், குழந்தையும்..

சில சமயங்களில்,
அவன் இரவும்,
அர்த்தமற்று நிற்கிறது..
இமைகளின் பிரிவால்..
விடியலை நோக்கி அவன்..

புரியாத அவன் வாழக்கை,
ஏதோ ஒரு தேடலில்,
எப்போதும் கணிணியுடன்
ஒரு கண்ணாடி அறைக்குள்..

அமர்ந்த இடத்திலேயே,
வாழும் நாடோடி வாழ்க்கையை,
கற்று தேர்ந்த,
கணிப்பொறியாளன்...

வாழ்க்கை என்றால் என்ன?
என்பதையும்,
ஏதோ வலைதளத்தில்
தேடிக்கொண்டிருந்தான்..

Download As PDF

Thursday, November 17, 2011

Wednesday, June 1, 2011

ஒரு காதல் கதை..


ஒரு மாலை வேளையில்,
ஒரு காட்டுப் பாதையில்,
ஒரு காதலனும், காதலியும்
நடந்து செல்லும் போது,
கடவுள் தீடிரென,
அவர்கள் முன்னே தோன்றினார்..

காதலனிடம்,
உன் காதலி,
உயிரற்ற பொருளாக மாறும்,
சாபத்தை பெற்றுள்ளாள்..
அவள் என்னவாக மாறினால்,
உனக்கு சந்தோஷம் என்று கடவுள் கேட்டார்..

நீ சொல்லும் பதிலில்,
உன் காதலிக்கு உயிர் கிடைக்கும் என்றார்..

பதறிப் போனான் அவன்..
அவள் இல்லாத வாழ்க்கை
ஒன்று எனக்கு இல்லை..
நான் உறங்கும் சவப்பெட்டியாக
அவளை மாற்றி விடுங்கள் என்றான்..

உன் காதலின் மென்மையைக் கண்டோம்..
உன் காதலியை விட்டோம் என்றார்..

அடுத்து அவன் காதலியிடம் கேட்டார்..
உன் காதலன்,
உயிரற்ற பொருளாக மாறும்,
சாபத்தை பெற்றுள்ளான்..
அவன் என்னவாக மாறினால்,
உனக்கு சந்தோஷம் என்று கேட்டார்..

ஆனால், அவளோ!!
அவனை தீக்குச்சியாக மாற்றும் படியும்,
அவனை வைத்து,
தன்னை எரித்து,
உன்னையும் எரித்து விடுவேன்..
என்றாள் கடவுளிடம்..

அவளுக்குள் ஒரு சாவித்திரியையும்,
ஒரு கண்ணகியையும் பார்த்ததாக
சொல்லி விட்டு மறைந்தார் கடவுள்,
நேற்று இரவு அவன் கனவில்...
Download As PDF

Thursday, February 17, 2011

முகவரி :- nila@gmail.com

(Written For tamil poetry competition, HCL Technologies on Feb 14th2011)
நீ, என் எதிர்வீட்டு
பெண்ணாக இருந்திருந்தால்,
தெரு முனையில்,
ஒற்றைக் கால் ரோஜாவுடன் நின்றிருப்பேன்..

பள்ளியிலும்,
கல்லூரியிலும் நீ இல்லை..
படித்திருந்தால்,
கடைசிநாளிலாவது சொல்லிருப்பேன்..

பார்த்ததும் காதல்,
எனக்கு நம்பிக்கை இல்லை..
உனது புகைப்படத்தைப் பார்க்கும் வரை..

புகைப்படமும்,முகவரியும் இருந்தும் பயனில்லை...

என் நட்பின் அழைப்பை,
அங்கீகரித்து விட்டு,
மெளனமாய் இருக்கும்,
ஏ face book பெண்ணே...

Nila
முகவரி :nila@gmail.com                                                                                                            
Download As PDF