Sunday, January 19, 2014

நான் ஏன் நிலவைக் காதலித்தேன்?



பிரபஞ்சம் முழுவதும்,
நட்சத்திரங்களால் நிறைந்திருக்க,
நான் ஏன் நிலவைக் காதலித்தேன்?

நிலவுக்கும் எனக்குமான,
உறவு இன்று ஏற்பட்டதில்லை..
தாயின் மடியிலிருந்து,
அவள் நிலவைக்காட்டி,
சோறுட்டிய நாளிலிருந்து..


நடக்க ஆரம்பித்த பிறகு,
சிறுவயதில்,
நிறைய முறை
முயன்று பார்த்திருக்கிறேன்..
நான் ஓடிய பக்கமெல்லாம்,
நிலவு வருகிறதா என்று?
ஒளிந்து மறைந்து..

















நிலாவிடம் காதல் சொல்ல,
மண்ணில் அதன்,
நிழல் தேடி அலைந்தேன்..

நீரில் அதன் பிம்பம் கண்டு,
காப்பாற்ற விழைந்தேன்..

எல்லாம் காதல்..




















சிறுவயது காதலெல்லாம்,
குழந்தைதனம் என்றார்கள்..
கடைசி வரை வராது என்றார்கள்..

பெரியவன் ஆன பிறகு,
முகமறியா ஊருக்கு,
முதல் முதலில் பயணப்பட,
அதிகாலையில் அவ்வூறை அடைந்த பிறகு,
மண்ணில் தெரிந்த முகம்,
ஏதாவது தென்படுகிறதா?
என தேடி,
தேய்ந்து,
ஓய்ந்த பிறகு,
விண்ணில் விழி உயர,
எனக்காக காத்திருக்கும் நிலவை
பார்த்ததிலிருந்து காதலித்தேன்,,



அதுசரி,
பிரபஞ்சம் முழுவதும்,
நட்சத்திரங்களால் நிறைந்திருக்க,
நான் ஏன் நிலவைக் காதலித்தேன்?

என்னை நெருங்கி வரும்,
நட்சத்திரம் ஒன்று,
நிலவனதோ??

என் நிலவனதோ?




Download As PDF

Wednesday, January 8, 2014

காதல் - ஜாக்கிரதை......

நீ ஒரு தேவதையிடம்,
காதல் கொண்டால்,

தேவதை உன்னை எப்போதும்,
ஒரு வழிப்பாதையிலே
கூட்டி செல்கிறாள்..

அவள் உன் கைப்பிடித்து,
கூட்டி செல்லவே பிரியப்படுகிறாள்...
காதலுக்குதான் கண்ணில்லையே,
கண்களை வேறு மூடி கொள்ள சொல்வாள்..
நீயும் அசட்டுதனமாய்,
அவளை எப்படி பார்ப்பது என்பாய்..

அவள் சிரிப்பில்,
நீ திசைகளை மறப்பாய்..

ஒரு வேளை,
நீ நடந்த வந்த பாதையில்,
திரும்பி பாதச்சுவடுகளை தேடினால்,
அங்கு பாதைகளே மறைந்து போயிருக்கும்..
இது தேவதைகளுக்கு மட்டும்
தெரிந்த ரகசியம்..

காதல் என்பது ஒரு வழிப்பாதை..
அதற்கு பிறப்பு மட்டும் தான்..

ஒருவேளை,
இறப்பு என்பது
அவளுடன் இணைந்தே இருக்கும்..

நீயும் அதற்கே ஆசைப்படுவாய்..

காதல் என்பது ஒரு வழிப்பாதை - ஜாக்கிரதை..
Download As PDF