Sunday, February 19, 2012

உன்னை தேடி...


உன்னை விட,
அழகான ஒன்று,
இவ்வுலகில் இருக்கக்கூடாதென,
பூக்களை பரிசளிக்கிறேன்..
உன்னை சந்திக்கும் போதெல்லாம்,
கடைசி பூக்கள் பூக்கும் வரை...

அதை நீ சூடி,
அவையெல்லாம் வாடி,
பார்க்கவே சந்தோக்ஷம்,
உன்னை சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம்,
ஏதோ, சாதித்து விட்டதாய் திரும்புவேன்..

பிரம்மனுக்கும் ஒரு எச்சரிக்கை!
இனி, அவன் உன்னை விட,
எதையும் அழகாக படைக்க மாட்டான்.
நான் அழித்து விடுவேன் என்று...

நம் ஜென்மம் முடியட்டும்
என காத்து இருப்பான்..

இன்றும் அப்படிதான்..
வார இறுதி நாட்கள்..
உன்னை தேடி,
பூக்களோடு புறப்படுகிறேன்..



இன்றாவது,
உன்னை முத்தமிட வேண்டும்...

ஒவ்வொரு முறையும்,
உன்னை முத்தமிட நெருங்கி,
முத்தமிடாமல் திரும்பி வருவது
எனக்கு வாடிக்கையாகி விட்டது,,

ஆனால், நீயோ!
அது, எதிர்பார்த்தது தான்
என்பது போல்,
அமைதியாய் இருப்பாய்..

உனக்கென்ன தெரியும்..
நான் படும் அவதி..
இன்று வரை தெரியவில்லை..

உன்னை மிக அருகே
பார்க்கும் போது,
ஏன் குழம்பி போகிறேன்..
எங்கு முத்தமிட வேண்டும் என்று..
அவ்வளவு அழகு நீ..



நிலவின் அழகிற்கு,
காரணம் நிலவல்ல..
இரவுகள்,,
அழகை அதிமாக்கும் இரவுகள்..

உலக விசித்திரம் தான்.

அதனால் தான்,
வெளிசமற்ற இரவில்
உன்னுடன் நடப்பதை தவிர்க்கிறேன்..
பயத்தினால் அல்ல..
நீயோ இரவில் ஜொலிப்பவள்...
அடிக்கடி, சிரித்து வேறு தொலைவாய்..
பின்பு தொலைவது நானும்,
என் தூய்மையான காதலும் தான்...



மனதில் தோன்றும் மறுமுகத்தால்,
எப்பொழும் தள்ளியே இருக்கிறேன்..
தூய்மையான காதலை பரிசளித்து,
உலகுக்கு பறைசாற்ற முயலுகிறேன்..

நான் உன் காதலன்,
மிக நல்லவன் என நீ நினைப்பாய்..
ஆனால், நான் மாறியது உன்னால் தான்..
உன்னை பார்த்த பிறகு தான்..

இன்றும் உன்னை பார்ப்பதற்கு,
கடற்கரையில் காத்திருக்கிறேன்..

பிறப்பின் அர்த்தம் புரிவது,
உன்னை பார்க்கும் போது தானே..



நீயும் தூரத்தில் வருவதைக்கண்டு,
பூக்களோடு நெருங்குகிறேன்..

யாரென்று தெரியாத உன்னை
காதலித்து கொண்டிருக்கும் போதே,
கனவுலகத்தின் ஆயுட்காலம்
முடிந்துவிட்டதனே,
விடிந்து விட்டதனே,
எழுப்புவார்கள்
என் அறை எமன்கள்..

காதலுக்கு கனவில்
இல்லை எதிரிகள்..

சற்றென்று எழுந்துவிடவே,
காதல் எதிரிகளை
கண்களால் எரித்து விட்டு,
கனவுலக்கு செல்ல முற்படுகிறேன்..
சொல்லாமல் வந்து விட்டனே!
என் கனவு காதலியே..

மறுபடியும் உன்னை
பூக்களோடு சந்திப்பேன்..
இவ்வுலகில் இறந்து,
கனவுலகில் பிறந்து...
Download As PDF

No comments:

Post a Comment