Sunday, February 26, 2012

அவள் விசை...


புவி ஈர்ப்பு விசையில்
வாழ்பவன் நான்..

அவளின் முதல் பார்வையிலேயே,
எவ்வளவு வேகத்தில்,
காதலில் விழுந்தேன் என்று
எனக்கே தெரியவில்லை..
இதேன்ன அவள் விசை..

நியூட்டனே,
அவள்விசை தெரியுமா?

அவள் கண்ணின்
ஈர்ப்பு விசையாவது தெரியுமா?

அவள் கையசைவின்,
அதிர்வெண்...

அவள் பேச்சின்
அலைநீளம்...

செத்தே போனேன் நான்..
அவளைப் பார்க்கும் போதெல்லாம்,
என் காதலுக்குதான்,
சவால் என்றால்,
உன் அறிவியலுக்குமா???

புரியவில்லை..
நினைவுகளும்,
கனவுகளும்,
காதலுக்கு
ஏன் வினையில்லை என்று..

என் கற்பனைகளின்
எதிர்வினை யாவும்,
அவளுக்கான கவிதைகள் ஆகின..

நான் காதலால்,
கவிஞன் ஆன,
நாளன்று,
உனது மூன்றாம்
விதியை நம்பினேன்..
என் காதலுக்கு உதவுமேன..

ஒவ்வொரு வினைக்கும்
ஒரு எதிர் வினை உண்டேன
எழுதியது நீ தானே..

பூக்கள் இலகுவாக,
பெண்களை அடைவது,
ஒற்றை காலில் நிற்பதால் தானே..
நானும் ஒற்றைக்காலில்
தெருவோரத்தில் நின்றிருந்தேன்..
அவள் வரும் பாதையில்..























அவள் இயக்கத்தில்
இருக்கும் போது,
என் புற விசை
ஒரு அக விசையும்,
ஏற்படுத்தவில்லை அவளிடம்...

உன் விதி தோற்று போனது....
எல்லாம் என் விதியா?
உன் விதியா?

மாற்றி எழுது..
உன் மூன்றாம் விதியை..

ஒவ்வொரு வினைக்கும்,
ஒரு எதிர்வினை இருக்கிறது..
ஒரு தலை காதலுக்கு
அது பொருந்தாது என்று..
Download As PDF

No comments:

Post a Comment